தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பரோலில் சென்ற‌ நளினி, அவரது தாயார் பத்மாவதியுடன் சந்திப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக வேலூர் சிறையில் உள்ள நளினி தனது மகள் திருமண ஏற்பாடுகளை செய்ய 6 மாதம் பரோல் கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கடந்த ஜூலை 5-ம் தேதி அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக நளினிக்கு அவரது தாய் பத்மா மற்றும் காட்பாடியை சேர்ந்த பெண் ஒருவரும் ஜாமீன் அளித்திருந்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவர், நளினி பரோலில் செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்நிலையில் சிறையின் சில நடைமுறைகள் முடிவடைந்து 19-வது நாட்களான ஜூலை 25 இல் அவர் வெளியே வந்தார்.

ரங்காபுரம் புலவர் தெருவில் இருக்கக்கூடிய திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சிங்கராயர் இல்லத்தில் நளினி தங்க வந்தார். இதன்போது வீட்டுக்கு வந்த மகளை, நளினியின் தாயார் பத்மா ஆரத்தி எடுத்து வரவேற்றார். தனது 28 சிறை வாசத்தில் தந்தை மரணத்தின் போது 12 மணி நேர பரோலில் வெளிவந்த நளினி, அதன் பின்னர், தற்போது ஒருமாத பரோலில் வெளிவந்துள்ளார். லண்டனில் உள்ள நளினியின் மகள் ஹரித்திரா திருமணத்திற்காக அவர் வந்துள்ளார். இந்நிலையில் நளினி, அவரது தாயார் பத்மாவதியுடன் எடுத்துகொண்டபுகைப்படம் வைரலாகியுள்ளது. இந்த உலகில் எதையும் விலைகொடுத்து வாங்கிவிடலாம் . தாய் பாசம் ஒன்றைத்தவிர! தாய்ப்பாசத்திற்கு ஈடு இணை எதுவுமே இல்லை இவ்வுலகில்..

Comments
Loading...