Designed by Iniyas LTD
பறிபோனது மஹிந்தவின் இராணுவ பாதுகாப்பு!
ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்கு என வழங்கப்பட்டுள்ள இராணுவத்தினரை அகற்றிவிட்டு பொலிஸாரை அவரது பாதுகாப்பிற்கு என நியமிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது.
தொடர்புடைய பதிவு
இதனை உறுதி செய்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் பேச்சாளர், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள 50 படையினரை வெள்ளிக்கிழமை இராணுவ தலைமையகத்திற்கு வருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் எடுத்த தீர்மானத்திற்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு மாத்திரமல்லாமல் அனைத்து முக்கிய பிரமுகர்களினது பாதுகாப்பிற்கும் பொலிஸாரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
