தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பல உயிர்களை பிணமாக்கிய சுனாமியே…

tsunami
வாழ்ந்த சுவடுகளே தெரியாமல்
வழித்தள்ளிச் செல்லப்பட்டோம்…
வயிற்றுக்கு உணவளித்த கடல் தாயே!
தன் - வயிற்றிற்கு இரையாக்கினாள் எம்மை.
கரையொதுங்கிய உறவுகளை ஒன்றாய்,
ஒரே குழியில் மூடிவிட்டு…
எஞ்சிய நாம் எமக்குள் அழுது புலம்பினோம்.
எத்துயரும் தீரவில்லை - மிச்சமிருக்கும்
வாழ்நாளை வாழ்ந்து முடிக்கவென்று?
அச்சத்துடன் அலை கடலின் மீதேறினோம்
அவள் மீண்டும் பசியாற்றினால்!..
ஆயினும் இத்துயரும் தொடரவில்லை…
கடல்கொண்டு போன மிச்சத்தை
யுத்தம் தின்று ஏப்பமிட்டது.
ஒரு துயரின் சுவடுகளை
மொத்தமாய் துடைத்துக் கழுவி
இன்னொரு துயர் அடித்துச் சென்றது.
துயரே துயரை துடைத்தாலேயொழிய
எத்துயரும் எமை விட்டுப் போவதில்லை.
இத்துயரை தீர்க்க இன்னுமொரு துயர் வரும்
அன்று அழுவதற்காய்
இன்றையகண்ணீரை  சேமித்துக்கொள்கின்றோம்
ஏதேன் தோட்டத்து ஆப்பிளை
ஆசைக்குக் கூட  புசித்ததில்லை  நாம்
எனினும் எல்லாச்சாபங்களும்
எமைச் சூழ்ந்து கொள்வதுவேன்?
 -மோகன்ராஜ் -
Comments
Loading...