Designed by Iniyas LTD
பல தசாப்தங்களிற்கு முன்னர் இலங்கையில் இருந்து வெளியேறி நீலகிரியில் வசித்து வரும் மக்கள்
பல தசாப்த காலங்களுக்கு முன்னர் இலங்கையில் வெளியேறி தமிழகத்தின் நீலகிரியில் வசித்து வரும் மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில், வாழ்ந்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இந்திய ஊடகமான த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
நீலகிரியில் பல வருடங்களாக அவர்கள் வசித்து வருகின்ற போதும், அவர்களுக்கான வசதி வாய்ப்புக்கள் எவையும் இன்றி சிரமப்படுவதாக அந்த செய்திஒயில் தெரிவிகப்பட்டுள்ளது.
குறிப்பாக கூனூரில் இருந்து அம்மன் நகருக்கு செல்லும் குறுகிய பாதையில் 81 வீடுகளில் இலங்கை மக்கள் வாழ்கின்றதாகவும், அதேபோல ‘விஜயநகர் பலஸில் 10 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் மக்களும் சட்டவிரோத குடியேறிகளாகவே கருதப்படுகின்றதாகவும் த ஹிந்து குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள், கடந்த 1964ஆம் ஆண்டு மற்றும் 1974ஆம் ஆண்டுகளில் இந்திய இலங்கை இரு தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவில் குழுயேறி வாழ்பவர்கள் என த ஹிந்து தெரிவித்துள்ளமை குரிப்பிடத்தக்கது.