Designed by Iniyas LTD
பளை வரை யாழ்தேவி
யாழ் தேவி புகையிரதம் இந்த மாத இறுதிக்குள் பளை வரையிலான சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. தற்போது யாழ் ரயில் மார்க்கத்தின் நிர்மானப் பணிகள் பூர்த்தியடைந்து வருவதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, எதிர்வரும் சித்திரை வருடப் பிறப்புக்குள் யாழ்ப்பாணம் வரை யாழ்தேவி பயணிப்பதற்கான அனைத்து கட்ட நடவடிக்கைகளும் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது யாழ்தேவி, கிளிநொச்சி வரை மாத்திரமே சேவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.