Designed by Iniyas LTD
பழனியில் மீண்டும் தொடங்கியது ரோப்கார் சேவை : பொதுமக்கள் மகிழ்ச்சி
பழனி முருகன் கோயிலில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த ஒரு மாத காலமாக நிறுத்தப்பட்டிருந்த ரோப் கார் சேவை இன்று முதல் துவங்கப்பட்டது.
நாள்தோறும் பழனி முருகன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மலை அடிவாரத்தில் இருந்து குழந்தைகள் ,முதியவர்கள், மாற்றுத்திறனாளி பக்தர்கள் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக கோயில் நிர்வாகம் ரோப் கார் மற்றும் வின்ச் சேவைகளை இயக்கி வருகிறது.
இந்நிலையில் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரோப் கார் சேவை ஒரு மாத காலமாக நிறுத்தி வைக்கப்படிருந்தது. தற்போது ரோப் காரின் மேல் தளம், இரும்புச் சக்கரங்கள், பெட்டிகள் வண்ணம் பூசும் பணிகள் நிறைவடைந்து பக்தர்கள் வசதிக்காக இன்று முதல் துவங்கியது. ரோப் கார் சேவை தொடங்கியதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.