Designed by Iniyas LTD
பழிவாங்களுக்காக யாழில் நடந்த கொடுமை!
யாழ்ப்பாணத்தில் தனியார் தையல் நிலையம் ஒன்று விசமிகளால் தீ வைத்து எரியூட்டப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர், கோயில் வீதியில் அமைந்துள்ள நிலையம் மீதே தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் நேற்று நள்ளிரவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பழிவாங்கும் நோக்கில் இவ்வாறு தீ வைத்து மிரட்டல் விடுத்துள்ளதாக தையல் நிலையத்தில் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
2009 டிசெம்பர் மாதத்திலிருந்து நல்லூர் கோவில் வீதியில் தையல் நிலையம் வைத்துள்ளேன். என்னை அந்த இடத்திலிருந்து அகற்ற அயலவர்கள் பல தடவைகள் முயற்சிகளை முன்னெடுத்தனர்.
மின்சார சபைக்கு முறைப்பாடு செய்து எனது கடைக்கான மின் இணைப்பையே துண்டித்தனர். பின்னர் உரிய காரணங்களைக் கூறி மீளவும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும் எனது கடையின் பூட்டை உடைத்த அயலவர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு உள்ளது.
இந்த நிலையிலேயே அவர்கள் இந்த இழிவான செயலை நேற்றிரவு செய்துள்ளனர் என தையல் நிலைய உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.