Designed by Iniyas LTD
பவதா – வலம்புரி கப்பல்கள் முழ்கடிப்பில் காவியமான 11 கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள்
திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து 22.02.1998 அன்று காங்கேசன்துறை துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் ”வலம்புரி” கப்பல், மற்றும் ”பபதா” படைக்காவிக் (தரையிறக்கம்) கப்பல் கப்பற் தொடரணியை பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலிகள் லெப்.கேணல் கரன், மேஜர் சுலோஜன், மேஜர் வள்ளுவன், மேஜர் தமிழினியன், மேஜர் குமரேஸ், மேஜர் தமிழ்மங்கை, கப்டன் மொறிஸ், கப்டன் மேகலா, கப்டன் ஜனார்த்தினி, கப்டன் வனிதா, கப்டன் நங்கை ஆகியோரின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

ஏழு மணிநேரம் இடம்பெற்ற இந்தக் கடற்சமரின்போது தமிழர்களின் வீரம் மீண்டும் சிங்களத்திற்
கு கடற்கரும்புலிகளால் புகட்டப்பட்டது. பல சாதனைகள் தடம் பதியப்பட்டும் சென்றது. இத் தாக்குதலில் 47 கடற்படையினர் கொல்லப்பட்டும் 62 கடற்படையினர் படுகாயமடைந்தும் கப்டன் தர அதிகாரி உட்பட சில கடற்படையினர் தமிழ்நாட்டுக்கு தப்பிசென்று பின்னர் விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.