Designed by Iniyas LTD
பவானி சிங்கை மாற்றியமைக்க கோரிய மனு வேறு அமர்வுக்கு மாற்றம்
அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், இன்று புதன்கிழமை தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.பி.லோக்குர் மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் தீர்ப்பில் எதிரெதிர் கருத்துக்களை தந்ததால், இந்த வழக்கு மேலும் கூடுதல் எண்ணிக்கையிலான நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கபட்டிருக்கிறது.
ஏற்கனேவே இந்த விவகாரத்தில் தீர்ப்பு வெளியடப்படும் வரை, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டிருந்த இடைக்கால ஜாமீன் காலக்கெடுவும் இந்த வாரத்தில் முடிவடையவுள்ளது. இதைத்தொடர்ந்து வழங்கப்பட்ட ஜாமீன் காலத்தை நீட்டிக்க கோரி ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையும் வரும் 17 ஆம் தேதி வெள்ளியன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
