Designed by Iniyas LTD
பாகிஸ்தானுக்கும்இலங்கைக்கும் இடையில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடல்..
பாகிஸ்தானுக்கும்இலங்கைக்கும் இடையில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் , இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவும், பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் சபார் மொகமட் அப்பாசிக்கும் இடையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, பாதுகாப்புடன் தொடர்புடைய கூட்டு மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் தொடர்பான விடயங்கள் குறித்து, கலந்துரையாடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது.