தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாகிஸ்தான் அணிக்கு ஏமாற்றம் அளித்த நசிர் ஜாம்ஷெத்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 339 ஓட்டங்களை குவித்தது.uae_pakistan

நியூசிலாந்தில் உள்ள நேப்பியரில், பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதும் உலகக்கிண்ண ‘பி’ பிரிவு லீக் போட்டி இன்று நடக்கிறது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணித்தலைவர் முகமது தாகிர் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் நசிர் ஜாம்ஷெத் (4) ஏமாற்றம் அளித்தார்.

பின் இணைந்த அகமது ஷேசாத் (93), ஹாரிஸ் சோகைல் (70) ஜோடி கைகொடுத்தது. அடுத்து வந்த மக்சூட் (45) அரைசத வாய்ப்பை இழந்தார்.

பொறுப்பாக ஆடிய அணித்தலைவர் மிஸ்பா (65) நம்பிக்கை தந்தார். உமர் அக்மல் (19) நிலைக்கவில்லை. அப்ரிதி (21), வாகாப் ரியாஸ் (6) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனால் பாகிஸ்தான் அணி 300 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து ஐக்கிய அரபு எமிரேட்சுக்கான இலக்கை கடினப்படுத்தியது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பில் குருகே 4 விக்கெட்டுகளையும், முகமது நீவீது ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Comments
Loading...