தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளார் சயீத் அஜ்மலுக்கு பந்து வீச ஐசிசி தடை விதித்துள்ளது

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளார் சயீத் அஜ்மலுக்கு பந்து வீச ஐசிசி தடை விதித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக விளங்கி வருபவர் சயீத் அஜ்மல்.

சென்ற மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, காலே மைதானத்தில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிய போது அவரது பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கியது.Pakistans-Saeed-Ajmal-spi-007

அவர் பந்து எறிவது போன்று இருப்பதாக நடுவர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) புகார் அளித்தனர். இதன் பேரில் அஜ்மலின் பந்து வீச்சு சோதனைக்குட்படுத்தப்பட வேண்டும் என்று ஐ.சி.சி. உத்தரவிட்டது.

இதையடுத்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்திற்கு அஜ்மல் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ஆகஸ்டு 25ம் திகதி நிபுணர்கள் மூலம் சந்தேகத்திற்குரிய அவரது பந்து வீச்சு பல்வேறு கட்டமாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சோதனை முடிவில் அவரது பந்து வீச்சு சட்டத்திற்கு புறம்பாக இருப்பதாகவும், அவர் பந்து வீச தடை விதிக்கப்படுவதாகவும் ஐ.சி.சி. நேற்று அறிவித்தது. இது தொடர்பாக ஐ.சி.சி. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பந்து வீசும் போது அதிகபட்சமாக 15 டிகிரி அளவுக்கு தான் ஒரு பவுலர் கையை வளைக்க வேண்டும்.

அதற்கு மேல் சென்றால் அது விதிமுறைக்கு புறம்பானது. அஜ்மலின் பந்து வீச்சு முறைகளை தனிப்பட்ட முறையில் சோதித்த போது, எல்லா தடவையும் 15 டிகிரி கோணத்திற்கு மேல் அவரது முழங்கை வளைவது தெரிய வந்திருக்கிறது. எனவே சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீசுவதில் அவருக்கு உடனடியாக இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடக்க உள்ள நிலையில், ஒரு நாள் போட்டி தரவரிசையில் உலகின் ‘நம்பர் ஒன்’ பவுலரான அஜ்மலுக்கு பந்து வீச தடை விதிக்கப்பட்டிருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments
Loading...