Designed by Iniyas LTD
பாகிஸ்தான் தோல்வியால் ரசிகர் தற்கொலை!
ஆசிய கிண்ண போட்டியில் வங்கதேசத்திடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததால் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஆசிய கிண்ண 20 ஓவர் போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெறுகிறது.
இதில் வங்கதேசத்திடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததால், இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி தான் வெற்றி பெறும் என கூறிய முகமது சபீக்(50) என்ற ரசிகர், தனது ஒருமாத சம்பளத்தையும் பந்தயமாக கட்டியிருக்கிறார். ஆனால் தோல்வி அடைந்ததால் விரக்தியான சபீக், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.