Designed by Iniyas LTD
பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 70 கார் ஏலம் ..
பாகிஸ்தானில் பிரதமர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் புரூப் கார் உள்ளிட்ட 70 ஆடம்பர கார்கள் நேற்றைய தினம் ஏலம் விடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள இம்ரான் கான்,அங்கு நாட்டு மக்களுக்காக செலவிடுவதை விட,
நாட்டை ஆள்பவர்களுக்கே அதிகம் செலவழிக்கப்படுகின்றதாக கூறியிருந்தார்
இந்த நிலையில் செலவுகளை கட்டுப்படுத்த தன் பிரதமர் இல்லத்தில் தங்கப் போவதில்லை எனவும் , பதிலாக இஸ்லாமாபாத்தில் ராணுவ செயலாளர் வீட்டில் தங்க இருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
தொடர்புடைய பதிவு
அதோடு பிரதமர் இல்லம் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக மாற்றப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
அந்தவகையில் பிரதமர் அலுவலகத்தில் உள்ள 33 புல்லட் புரூப் கார்கள் உள்ளிட்ட ஆடம்பர கார்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான 102 சொகுசு வாகனங்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டு,
அந்த பணம் மக்களின் சேவைக்காக பயன்படுத்தப்படும் என ஏற்கனவே இம்ரான்கான் கூறியிருந்தார்.
அதன்படி நேற்று உறித்த 70 ஆடம்பர கார்களும் ஏலம் விடப்பட்டது.
அது பிரதமர் உபயோகித்த கார்கள் என்பதால் கார் அனைத்தும் அதிக விலைக்கே ஏலம் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மீதமுள்ள கார்களும் வரும் நாட்களில் ஏலம் விடப்படும் என தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
