தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாக்கிஸ்தானில் கோரவிபத்து – 19 பயணிகள் உடல்நசுங்கி பலி

பாகிஸ்தானில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாலும், டிரைவர்கள் பொறுப்பற்ற விதத்தில் வாகனங்களை ஓட்டுவதாலும், சாலை விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் அங்கு சாலை விபத்துகளில் பலியாகி வருகின்றனர்.Pakistan

இந்த நிலையில் அங்கு பஞ்சாப் மாகாணத்தில் தீக்ரிவாலா என்ற இடத்துக்கு அருகே நேற்று ஒரு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.  இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 19 பயணிகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் பெண்கள். 2 பேர் குழந்தைகள் ஆவர்.  15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசாரும், மீட்பு படையினரும் அங்கு விரைந்து சென்று, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்சுகளில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 2 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Comments
Loading...