தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாக்கிஸ்தானில் பொம்மை வெடிகுண்டு வெடித்து 3 பேர் பலி

பாகிஸ்தானில் ‘பொம்மை வெடிகுண்டு’ வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் ஸ்வாட் மாவட்டத்தில், பாஷிகிராம் என்ற இடத்தில், ஜார் முகமது என்பவருடைய வீட்டின் வெளியே நேற்று ஒரு பொம்மை கிடந்திருக்கிறது. அதைப் பார்த்த அவரது குழந்தைகள், அதை வீட்டுக்குள் எடுத்துச்சென்று, விளையாடிக்கொண்டிருந்தனர்.Three-killed

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் பலத்த சத்தத்துடன் அது வெடித்தது. அப்போதுதான் அது பொம்மை வெடிகுண்டு என தெரிய வந்தது.இந்த குண்டுவெடிப்பில் ஜார் முகமதுவும், அவரது 2 குழந்தைகளும் பலியாகினர். 3 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

தகவல் அறிந்ததும் வெடிகுண்டு செயலிழப்பு படையினர் அங்கு விரைந்து சென்று, தடயங்களை சேகரித்ததுடன் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments
Loading...