Designed by Iniyas LTD
பாக்கிஸ்தான் – நியூசுலாந்து 5ஆவது கிரிகட் போட்டி
பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அபுதாபியில் நடந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 275 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் வில்லியம்சன் 97 ஓட்டங்களும், டெய்லர் 88 ஓட்டங்களும் எடுத்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 43.3 ஓவரில் 207 ஓட்டங்களுடன் சுருண்டது. சொகைல் 65 ஓட்டங்களும், ஷேசாத் 54 ரன்னும் எடுத்தனர். ஹென்றி 5 விக்கெட் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து 3–2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடர் 1–1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடர் 1–1 என்ற கணக்கிலும் சமநிலையில் முடிந்தது.