தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாஜக எம்எல்ஏ-வால் தாக்கப்பட்ட குதிரை சக்திமான் மரணம்: விராட் கோலி இரங்கல்

virat-kholiபாஜக எம்எல்ஏ-வால் தாக்கப்பட்ட குதிரை சக்திமான் மரணமடைந்த நிலையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறை குதிரை “சக்திமான்’ கொடூரமாகத் தாக்கப்பட்டது. இதில், கால் பறிபோன அந்தக் குதிரைக்கு, செயற்கைக் கால் பொருத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. குதிரையைத் தாக்கியதாக பாஜக எம்எல்ஏ கணேஷ் ஜோஷி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அந்தக் குதிரை நேற்று உயிரிழந்தது.

இதற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, அப்பாவி ஜீவன் குதிரை சக்திமானின் ஆத்மா சாந்தி அடையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...