தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாடகியாக அறிமுகமாகின்றார் நட்சத்திர குடும்ப வாரிசு

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’.

கார்த்திக், அவருடைய மகன் கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார்.

இந்த படத்தில் வரலெட்சுமி சரத்குமார், இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன், சதீஷ் ஆகியோரும்  முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த, இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று  சென்னையில்  நடைபெற்ற உள்ளது .

பாடகியாகும் சிவகுமாரின் மகள்

 சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன.

இதில் மிஸ்டர்.சந்திரமௌலி என்ற பாடலை நடிகர் சிவக்குமாரின் மகளும், சூர்யாவின் தங்கையுமான பிருந்தா சிவக்குமார் பாடியிருக்கிறார்.

இந்த படத்தின் மூலம் இவர் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக், கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடித்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளமையும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விடயம்.

இந்த படத்தின் டிரைலரை நடிகர் மாதவன் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளார்ர.

அதோடுமிஸ்டர் சந்திரமெளலி திரைப் படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

Comments
Loading...