Designed by Iniyas LTD
பாடசாலை ஆசிரியர்களின் சம்பளங்களை அதிகரிக்க நடவடிக்கை..
பாடசாலை ஆசிரியர்களின் சம்பளங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் அண்மையில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பாடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலை ஆசிரியர்களின் சம்பளங்கள் குறைக்கப்படாது என்றும் ,பரீட்சை கடமைகளில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் கொடுப்பனவுகளை மேலும் அதிகரிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியை சிலர் குரோத உணர்வுடன் நோக்குகின்றதாகவும், குறுகிய அரசியல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நோக்கில் சிலர் இவ்வாறு சேறு பூசல்களில் ஈடுபட்டு வருகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.