தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாதிக்கப்பட்ட தரப்பிற்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜெனீவாவில் பாகிஸ்தான் ….

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது.

இன்றையதினம்  இலங்கை தொடர்பாக  தமது உத்தியோகப்பூர்வ அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பாச்லெட் சமர்ப்பித்ததை   தொடர்ந்து உறுப்பு நாடுகள், குறித்த அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்தன.

இதன்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதிநிதி  வலியுறுத்தியுள்ளார்.

யுத்தத்திற்கு பின்னர் இலங்கை பல காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு  யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த பொதுமக்களின் காணிகள் விடுக்கப்பட்டுள்ளமையினை பாகிஸ்தான் பிரதிநி இதன்போது வரவேற்றுள்ளார்.

எனினும்  , தீர்வுகாணப்படாத பல பிரச்சனைகள் இலங்கையில்   உள்ளதாகவும், அவை குறித்து ஆராய்ந்து தீர்வு பெற்றுக்கொடுப்பது அவசியமானது எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

 

Comments
Loading...