தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவுகளை அகற்றும் துப்பரவு பணியார்கள்

சிவகங்கை நகராட்சியில் வேலை செய்துவரும் துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மனிதக் கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுப்பட்டு வருவது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சிவகங்கை நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.kalivu

இவர்களின் பாதுகாப்பிற்கான உபகரணங்கள் வாங்குவதில் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து மெத்தனபோக்கை கடைபிடிப்பதாக துப்புரவு தொழிலாளர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.   இதனால் துப்பரவு பணியாளர்கள் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியிலும், கழிவுநீர் கால்வாயில் அடைப்புகளை சரிசெய்யும் பணிகளிலும் எவ்வித பாதுகாப்பு சாதனங்கள் இன்றி ஈடுபட்டு வருவதாகவும், இதனால் நோய் தொற்று எற்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Comments
Loading...