Designed by Iniyas LTD
பான்கீமூன் – ஜஸ்டின் ரூடோ சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனிற்கும், கனேடிய பிரதமர் ஐஸ்டின் ரூடோவிற்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது காலநிலை மாற்றம், அமைதிகாப்பு நடவடிக்கை, மற்றும் அகதிகள் விடயம் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும், பால்நிலை சமத்துவம், பெண்களுக்கான உரிமை மற்றும் ஐ.நாவின் அமைதி காக்கும் படையில் கனேடிய படை வீரர்களின் பங்களிப்பினை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தாக
வும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் அமைதிப் படையில், கடந்த 1990களில் பல ஆயிரம் கனேடிய இராணுவத்தினர் பணியாற்றி வந்த போதிலும், அந்த எண்ணிக்கை அண்மைய காலங்களில் மிகச் சிறிய அளவாக குறைவடைந்துள்ள நிலையில் கனடாவின் புதிய பிரதமர் ஐ.நா ஆணையாளருடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.