Designed by Iniyas LTD
பாப்பரசரின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்திவிட வேண்டும் – மகிந்த
வத்திக்கான் பாப்பரசரின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்திவிட வேண்டும் மகிந்த ராஜபக்ச தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.அவ்வாறு முன்னதாக தேர்தலை நடத்துவதற்கு அதற்கு சட்டத்தில் இடமுள்ளதா என்று அறிந்து கொள்ள உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு நவம்பர் 19ம் நாளுக்கு முன்னதாக, அதிபர் தேர்தலை நடத்த முடியுமா என்று உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறிய, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார்.அதிபர் சட்டத்தின்படி, தேர்தலுக்கு 35 தொடக்கம் 65 நாட்களுக்குள், அழைப்பு விட வேண்டும்.
முன்னதாக, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்த திட்டமிட்டிருந்த இலங்கை அரசாங்கம், தற்போது, அடுத்த ஆண்டு ஜனவரி 13ம் நாள் பாப்பரசர் இலங்கை வருவதற்கு முன்னதாக தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது.
இதனால், ஜனாதிபதி பதவியேற்று நான்கு ஆண்டுகள் முடிவடைவதற்கு முன்னதாகவே, ஜனாதிபதி தேர்தலை நடத்தலாமா என்று உயர்நீதிமன்றத்தில் கருத்தை அறிய இலங்கை ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.