தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாம்பன் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் 27 பேரை மீண்டும் இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது

பாம்பன் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் 27 பேரை மீண்டும் இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது. பாம்பன் மற்றும் மண்டபம் பகுதிகளில் இருந்து 800க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். நேற்று இரவு பாரம்பரிய பகுதியில் அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தியுள்ளனர்.தமிழக மீனவர்கள்

அதன்பின்னர், ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்களின் 7 விசை படகுகளையும், 27 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றுள்ளனர். தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களிடையேயான 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன் ஏற்பாடாக வருகின்ற சனிக்கிழமை (15.02.14) முதல் ராமேஸ்வரம் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்கள் 1 மாத காலம் மீன் பிடிப்பதை நிறுத்த உள்ளனர்.

இந்நிலையில் கடைசி முறையாக கடலுக்கு சென்ற பாம்பன் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றிருப்பது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Comments
Loading...