தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாரசிட்டமோல் மாத்திரையை கர்ப்பிணிகள் சாப்பிடலாமா?..

Acetaminophen ( பாரசிட்டமோல் என அழைக்கப்படுகிறது) வலி நிவாரணி மாத்திரை ஆகும். காய்ச்சல், இருமல், உடல் வலி போன்றவற்றிற்கு இதனை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இந்த மாத்திரையை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால், குழந்தைகள் Attention Deficit Hyperactivity Disorder குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. வீட்டுப் பாடத்தை செய்ய மறப்பார்கள், வகுப்பில் பகல் கனவில் ஆழ்ந்திருப்பார்கள். யோசிக்காமல் உடனுக்குடன் செயல்படுவார்கள்.pregnancycare

உட்காரும் போது படபடத்துக் கொண்டே இருப்பார்கள், கவனமின்மை (Inattention), அதீத இயக்கம் (Hyperactivity), உணர்ச்சி வேக செயல்பாடுகள் ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். இதுபோன்று Attention Deficit HyperactivityDisorder பிரச்சனை ஏற்படுவதற்கு கர்ப்பிணி பெண்கள் Acetaminophen மாத்திரையை உட்கொள்வதன் மூலம் இதன் தாக்கம் குழந்தைகளுக்கு அதிகரிக்கிறது. Bristol பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், 14,500 குடும்பத்தினர் கலந்துகொண்டனர், இதில் 53 சதவீதம் பெண்கள், தங்களுடைய 18வது வார கர்ப்ப காலத்தில் இந்த மாத்திரையை உட்கொள்கின்றனர்.

இதில் 42 சதவீத பெண்கள் 32வது வாரத்தில் மாத்திரையை உட்கொண்டுள்ளனர், இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களில் மொத்தத்தில் 6,916 தாய்மார்கள் தங்களுடைய கர்ப்பகாலத்தின்போது Acetaminophen மாத்திரையை உட்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில், 18 வது வாரத்தில், இக்குறைபாட்டிற்கான அறிகுறிகள் குழந்தைகளுக்கு வளர்ச்சியடையும், 35வது வாரத்தில் உணர்ச்சி அறிகுறிகள், நடத்தை பிரச்சினைகள் மற்றும் அதிகப்படியான அறிகுறிகள் போன்றவை காணப்படுகின்றன. மேலும், 5 சதவீத குழந்தைகளுக்கு, அவர்களது 7 வயதில், பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படுகின்றன என ஆய்வில் தெரியவந்துள்ளது

Comments
Loading...