தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாலியல் தொழிலாளியாக மாறிய நடிகை சதா

கதாநாயகிகளுக்கு கதை பிடித்து இருந்தால், அவர்களே அந்த படத்தை தயாரிக்கவும் தயங்குவதில்லை. இதற்கு சமீபகால உதாரணம், நயன்தாரா.

‘அறம்’ படத்தின் கதை பிடித்து இருந்ததால், அவரே தயாரித்தார். படமும் பேசப்பட்டது. பெரிய வெற்றியும் பெற்றது.

படம் தயாரிப்பு

நயன்தாராவைப் போல் நடிகை சதாவும் தன்னை நாயகியாக வைத்து, ‘டார்ச் லைட்’ படத்தை எடுத்து வருகிற டைரக்டர் அப்துல் மஜீத்தின் திறமையில் நம்பிக்கை வைத்து அவரது இயக்கத்தில் அடுத்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார்.

 

அதற்கு முழு காரணம், அப்துல் மஜீத் இயக்கி வரும் ‘டார்ச் லைட்’ படம்தான். பெண்களுக்கான விழிப்புணர்வு படமாக, ‘டார்ச் லைட்’ உருவாகி வருகிறது.

இந்த படம், வறுமையால் பாலியல் தொழிலுக்கு வந்த பெண்கள் பற்றி பேசுகிறது. நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட்டுடன் நின்று கொண்டு லாரி டிரைவர்களிடம் பாலியல் தொழில் செய்யும் பெண்கள் பற்றிய கதை, இது.

பெண்களை போகப்பொருளாக்கி, அவர்களை தங்கள் இச்சையை தீர்க்கும் ஒரு நுகர் பொருளாக்கி விடும் சமூக அவலத்தையும், அதன் பின்னணியில் இயங்கும் இழிவான ஆண்களையும், இந்த படம் தோலுரிக்கிறது.

சம்பவங்கள் முழுவதும் 90-களில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, குற்றாலம் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.

Comments
Loading...