Designed by Iniyas LTD
பால் குடங்களில் ஜெயின் ஸ்டிக்கரால் பெரும் சர்ச்சை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு எடுக்கப்பட்ட 1068 பால் குடங்களிலும் ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
ஜெயலலிதாவின் 68 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மடத்துக்குளம் பகுதி அதிமுக வினர், அம்மன் கோவிலுக்கு 1068 பால் குடங்களை எடுத்து வழிபட்டனர். அமராவதி ஆற்றிலிருந்து அம்மன் கோயில் வரை பால் குடங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்வில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்த பால் குடங்கள் ஒவ்வொன்றிலும், ஜெயலலிதாவின் படம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டபட்டிருந்தது. இது ஆன்மீகவாதிகள் மற்றும் பொதுமக்களிடைய கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.