Designed by Iniyas LTD
பா.ம.க. 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் 76 வார்டுகளுக்கு நேற்று வெளியிடப்பட்டது. நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று பா.ம.க. முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், கடந்த 27-ந் தேதி பா.ம.க. தனது முதல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 72 வார்டுகளுக்கு பா.ம.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, நேற்று மேலும் 76 வார்டுகளில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்கள் 2-வது பட்டியலை அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசும், இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசும் ஆகியோர் அறிவித்துள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. 2-ம் கட்ட வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
தமிழ்செல்வி சந்திரன் (1-வது வார்டு), ஜி.நாராயணசாமி (2-வது வார்டு), ஏ.ஞானசுந்தர் (3-வது வார்டு), கே.பிரகாஷ் குமார் (5-வது வார்டு), சி.ஏழுமலை (6-வது வார்டு), எஸ்.சேகர் (7-வது வார்டு), சுஜாதா விஜயகுமார் (8-வது வார்டு), ஆர்.வி.யுவராஜ் (9-வது வார்டு), ஆர்.வி.ஜெகன் (12-வது வார்டு), புவனா சங்கர் (18-வது வார்டு), பாப்பாம்மாள் தேவன் (22-வது வார்டு), மு.பழனி (24-வது வார்டு), து.தேவராஜ் (28-வது வார்டு), மா.பாஸ்கர் (30-வது வார்டு), க.சங்கர் (35-வது வார்டு), இரா.சரவணன் (36-வது வார்டு), எஸ்.உதயகுமார் (37-வது வார்டு), க.பழனிவேல் (38-வது வார்டு), மாலினி வடிவேல் (39-வது வார்டு), நிர்மலா கோவிந்தராஜ் (40-வது வார்டு), ஜெயந்தி முனுசாமி (41-வது வார்டு). டி.உமா (42-வது வார்டு), கே.பாக்யலட்சுமி (43-வது வார்டு),
ரஞ்சனி வேலு (44-வது வார்டு), எஸ்.பவானி (45-வது வார்டு), எஸ்.ராஜலட்சுமி (46-வது வார்டு), ஏ.இளவரசன் (47-வது வார்டு), சந்திரிகா சண்முகம் (48-வது வார்டு), கே.ஆர்.துளசி கிருஷ்ணர் (57-வது வார்டு), பிரியா துரைராஜ் (61-வது வார்டு), பார்வதி பார்த்தசாரதி (69-வது வார்டு), செல்லம்மாள் பாலன் (79-வது வார்டு), து.ஆயிரம் (80-வது வார்டு), அஞ்சனா சந்தானம் (81-வது வார்டு), சசிகலா ஜெயராமன் (82-வது வார்டு), ஜெயஸ்ரீ ஏழுமலை (83-வது வார்டு), ஆர்.கே.கோபிநாத் (84-வது வார்டு), ஹேமாவதி (85-வது வார்டு), எம்.மனோகர் (86-வது வார்டு), ஏ.பி.மணிகண்டன் (87-வது வார்டு), விஜயலட்சுமி சரவணன் (88-வது வார்டு), திலகம் மணியரசன் (89-வது வார்டு), கே.பி.பாண்டுரங்கன் (90-வது வார்டு), தமிழ்செல்வி சங்கர் (92-வது வார்டு). ராஜேஸ்வரி பிரபாகரன் (93-வது வார்டு), அமுல் மோகன்ராஜ் (120-வது வார்டு),
ஜமுனா கேசவன் (123-வது வார்டு), அம்சவல்லி ஆனந்தன் (125-வது வார்டு), செல்வி ஞானசவுந்தர் (126-வது வார்டு), கோமதி வெங்கடேசன் (128-வது வார்டு), பார்வதி ஏழுமலை (130-வது வார்டு), கவுரி கிருஷ்ண மூர்த்தி (132-வது வார்டு), எம்.செல்வராணி மோகனரங்கன் (147-வது வார்டு), கே.தனசேகரன் (148-வது வார்டு), மஞ்சுளா தனசேகர் (149-வது வார்டு), பி.பாலசுந்தரம் (150-வது வார்டு), லட்சுமி இருசப்பன் (152-வது வார்டு), இ.ரவி (155-வது வார்டு), லலிதா ராஜ் நாராயணன் (158-வது வார்டு), எம்.குப்பம்மாள் (160-வது வார்டு), வி.சுந்தரி (161-வது வார்டு), ஆர்.பி.பாஸ்கர் (163-வது வார்டு), ஏ.எழிலரசி (164-வது வார்டு), எம்.ஆர்.ராஜ்குமார் (165-வது வார்டு), செல்வி முருகேசன் (167-வது வார்டு), ஜி.நித்யா கவுரிசங்கர் (176-வது வார்டு). பி.வடிவேல் (177-வது வார்டு),
சி.சுந்தரி (180-வது வார்டு), பாரதி பாண்டியன் (182-வது வார்டு), எஸ்.சுகநாதன் (184-வது வார்டு), எஸ்.மோகன் (190-வது வார்டு), பிரேமா சிவலிங்கம் (191-வது வார்டு), ஹேமமாலினி (193-வது வார்டு), இரா.மோகனசுந்தரம் (197-வது வார்டு), எஸ்.ஆறுமுகம் (199-வது வார்டு). இதுவரை பா.ம.க. 2 கட்டங்களாக 148 வார்டுகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 52 வார்டுகளுக்கு விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.