Designed by Iniyas LTD
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பணியாற்றியவர் திடீர் மரணம்?
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிளம்பராக பணியாற்றிய ஊழியர் திடீரென மரணமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக சென்னை புறநகர் பகுதியிலுள்ள ஈவிபி ஈவிபி ஃபிலிம் சிட்டிக்குள் ‘செட்’ அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பிளம்பராக பணியாற்றிய கரீம் இப்ராஹிம் ஷேக் என்பவர் இன்று திடீரென உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த தொழிலாளி மும்பையை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் வலிப்பு நோயால் உயிரிப்பு என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.