Designed by Iniyas LTD
பிணவறையில் இருந்த பெண்ணின் சடலத்தை திருடிய கொள்ளையர்கள்…
நைஜீரியாவில் கொள்ளையர்கள் பிணவறையில் இருந்த பெண்ணின் சடலத்தை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் செயல்பட்டு வரும் மருத்துவமனை ஒன்றின் பிணவறையில் இருந்த பெண்ணின் சடலம் சமீபத்தில் மாயமாகியது.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் இதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தொடர்புடைய பதிவு
இந்த நிலையில் பிணவறையின் மேலாளருக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவன் தான் தான் பிணத்தை கடத்தியதாகவும், அதனை திருப்பி கொடுக்க வேண்டுமானால் ரூ.10 லட்சம் பிணைத் தொகையாக வழங்க வேண்டும் என பேரம் பேசியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து குறித்த போன் நம்பரை வைத்து போலீஸார் கொள்ளையனை பிடித்துள்ளனர்.
இதேவேளை பணத்திற்காக பிணத்தையும் விட்டுவைக்காத கொள்ளையனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென பலர் போலீஸாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.