Designed by Iniyas LTD
பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தி
அர்ப்பணிப்பு உணர்வுடன் ஒன்றுபட்ட சமுதாயத்தை உருவாக்க நாட்டு மக்கள் முன்வர வேண்டும் என்று தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில், இந்திய மக்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அமைதி, முன்னேற்றம், நல்லிணக்கம் ஆகியவற்றை கொண்டு வரும் ஆண்டாக இந்த புத்தாண்டு அமைய வேண்டும்.
இந்த ஆண்டில் வன்முறை ஒழிந்து, சகிப்பு தன்மையும், அனைத்து சமூகத்தினர் மத்தியில் புரிதல் உணர்வும் உருவாக வேண்டும். வன்முறையை தூண்டும் சக்திகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். நாட்டின் பன்முகத்தன்மையை போற்றி கொண்டாடும் ஆண்டாக புதிய ஆண்டு அமைய வேண்டும். நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். 2014ம் ஆண்டில் பல்வேறு நல்ல காரியங்களுக்கு புதிய தொடக்கமும், முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
அவை முழு அளவில் செயல்பட இந்த புத்தாண்டில் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் ஏழை மக்களை சென்று சேர வேண்டும். அரசின் செயல்பாடுகள் திறன் மிக்கவையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும். நம் நாடு பல துறைகளில் உச்சத்தை அடைய நாம் அனைவரும் உழைப்போம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.