தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

 பிரதமர் மீதான  பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது கூட்டமைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு  பிரதமர் மீதான  பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்திருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமரிடம் கூட்டமைப்பு முன்வைத்த  10 நிபந்தனைகளை அமுலாக்குவதாக உறுதியளித்து, பிரதமர் எழுத்து மூல ஆவணம் ஒன்றை கையளித்துள்ளதாகவும்,

அதன் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் தீர்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்தல், தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படல், காணாமல் போனோர் அலுவலகம் விரைவில் இயங்க ஆரம்பித்தல், காணிகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளின் அடிப்படையில் செயற்படல்,

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படுதல், பிரமாகாணத்தவர்கள் வடக்கு கிழக்கில் பணிக்கமர்ப்படுதல் தவிர்க்கப்படல், மஹாவலி வலையத்தில் உள்ள மக்கள் வெளியேற்றப்படாமல் அந்த நீர் அவர்களுக்கே விநியோகிக்கப்படுதல் மற்றும் திட்டமிட்ட  சிங்கள குடியேற்றங்களை தவிர்த்தல்,

மீன்பிடி நடவடிக்கைகளில் வெளிமாட்டத்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படகூடாது போன்ற  நிபந்தனைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு விதித்திருந்தது.

குறித்த  விடயங்களை அமுலாக்குவதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்து, எழுத்து மூலம் உறுதிப்பாட்டை வழங்கி இருப்பதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்  கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...