Designed by Iniyas LTD
பிரதேச வங்கியின் யாழ் கிளையில் புதுவருட நிகழ்வுகள்
பிரதேச அபிவிருத்தி வங்கியின் யாழ்ப்பாண கிளையில் புதிய ஆண்டில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை 2014-01-01 காலை இடம்பெற்றது.
அதன்படி வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட சீட்டிழுப்பில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
அத்துடன் இன்றைய தினம் கணக்கினை ஆரம்பித்தவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. இதேவேளை உரையாற்றிய வங்கி முகாமையாளர், வங்கி ஆரம்பித்து இரண்டாவது ஆண்டினை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். கடந்த ஆண்டில் பெரும் இலாபத்தை ஈட்டிய வங்கியாக பிரதேச வங்கி அமைகின்றது.
எனவே எமது வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பே இதற்குக் காரணம். அதன்படி இந்த ஆண்டும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளும் கடன்களை உரியநேரத்துக்குள் திருப்பி செலுத்துவதன் மூலம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக லாபத்தை ஈட்டமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.