தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரபல கலவன் பாடசாலை ஒன்றின் மாணவி காணாமற் போயுள்ளார்

கொழும்பு முகத்துவாரம் பகுதியிலுள்ள பிரபல கலவன் பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் காணாமற்போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது.தரம் 10இல் கல்வி பயிலும் 15 வயதான மாணவி நேற்று பாடசாலைக்கு சென்று வீடு திரும்பவில்லை என கிரிபத்கொடை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.download (1)

வத்தளை ஹுனுப்பிட்டியவைச் சேர்ந்த குறித்த மாணவி பாடசாலை நிறைவடைந்ததன் பின்னர் வீடு திரும்புவதற்காக பஸ் நிலையத்திற்கு சென்றதை அங்கிருந்தவர்கள் கண்டதாக உறவினவர்கள் கூறுகின்றனர்.இதேவேளை, கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டிற்கு அமைய மாணவியை கண்டுபிடிப்பதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இதுவரை காணாமற்போன மாணவி தொடர்பிலான எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

Comments
Loading...