தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரான்சின் எட்டாவது ஜனாதிபதியாக எமானுவல் மக்ரோன்!

பிரான்சின் எட்டாவது ஜனாதிபதியாக எமானுவல் மக்ரோன்!

பிரான்சில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மரின் லூப்பனிற்கு எதிராக போட்டியிட்ட எமானுவல் மக்ரோன் 65% வாக்குகளுடன் பிரான்சின் ஐந்தாவது குடியரசின் எட்டாவது ஜனாதிபதியாக எமானுவல் மக்ரோன் வெற்றி பெற்றுள்ளார். மிகவும் இளம் வயதுடைய பிரான்சின் ஜனாதிபதியாக எமானுவல் மக்ரோன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

39 வயது மட்டுமே ஆன எமானுவல் மக்ரோன் பிரான்சின் பொருளாதார் அமைச்சராகத் திகழ்ந்தவர். இரண்டு வாரங்களின் முன்னர் முதற்சுற்றுத் தேர்தலில் 24 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றிருந்தார் என்பதும் குறிப்படத்தக்கது.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்டதுடன், போலி ஆவணங்களைத் தயாரித்து, ரஸ்யாவின் கணினித் திருடர்களுடன் இணைந்து, பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறிய மரின் லூப்பனைப் படுதோல்வியடையச் செய்துள்ளார். வாக்களித்தவர்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெற்றுத் தனது வெற்றியினை எதிரிக்குத் தெரிவித்துள்ளார்.

பிரோன்சுவா ஒல்லோந்தினை அடுத்து பிரான்சின் ஜனாதிபதியாக எமானுவல் மக்ரோன் பிரம்மாண்ட வெற்றியை அடைந்துள்ளார். இவரிற்கு பிரோன்சுவா ஒல்லோந் தனது மகிழ்ச்சியையும் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.

மிகவும் அழகான, பெரிய வெற்றியை ஈட்டியுள்ளோம் என பிரோன்சுவா பய்ரூ புளகாங்கிதம் அடைந்துள்ளார்.

மக்களின் தீர்ப்பை ஏற்று எமானுவல் மக்ரோனின் வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனத் தனது உரையில் மரின் லூப்பன் தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற மேக்ரானுக்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். எங்களது நீண்டகால நட்பு நாடுகளில் பிரான்சும் ஒன்று. புதிய அதிபருடன் விரிவான அளவில் முன்னுரிமைக்கான விவகாரங்களில் பணியாற்றும் எதிர்பார்ப்பில் நாங்கள் இருக்கிறோம் என தனது வாழ்த்து செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...