தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரான்சில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் இறுதிப்போட்டி

பிரான்ஸ் – சுவிட்சர்லாந்து அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் இறுதிப்போட்டி பிரான்ஸ் நாட்டில் உள்ள லில்லே நகரில் நடந்தது. முதல் நாளில் இரு அணிகளும் தலா ஒரு ஒற்றையரில் வெற்றி கண்ட நிலையில், 2–வது நாளில் இரட்டையரில் சுவிட்சர்லாந்தின் பெடரர்–வாவ்ரிங்கா ஜோடி வெற்றி பெற்று 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.tennis-courts

இந்த நிலையில் கடைசி நாளான நேற்று மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரான்சின் ரிச்சர்ட் கேஸ்கியூட்டை சந்தித்தார். இதில் அனுபவம் வாய்ந்த 33 வயதான பெடரர் 6–4, 6–2, 6–2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இதன் மூலம் சுவிட்சர்லாந்து அணி 3–1 என்ற கணக்கில் 9 முறை சாம்பியனான பிரான்சை தோற்கடித்து, முதல் முறையாக டேவிஸ் கோப்பையை சுவைத்தது. டேவிஸ் கோப்பையை வென்ற அணிகளின் பட்டியலில் 14–வது நாடாக சுவிட்சர்லாந்து இடம் பிடித்துள்ளது.

Comments
Loading...