Designed by Iniyas LTD
பிரான்சில் வேலையில்லா திண்டாடம் அதிகரிப்பு
பிரான்ஸ் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் வெளியான தகவலின் படி, வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தினை அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரான்ஸில் 3.488 மில்லியன் மக்கள் வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை பெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கடந்த மாதத்தில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 27,400 அதிகமானதாகவும் இது கடந்த அக்டோபர் மாதத்தினை விட 0.8 சதவிகிதம் அதிகம் என்றும் முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 5.8 சதவிகிதம் அதிகம் எனவும் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் இதுபற்றி பேட்டி ஒன்றில் கூறிய பிரெஞ்சு அதிபர் ஹோலண்டே, தற்போதைய தனது ஆட்சி காலத்தில் இந்த வேலையின்மை பிரச்சனையை சரி செய்யவில்லையெனில் அடுத்த 2017 தேர்தலில் போட்டியிடமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், பிரான்ஸின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி வெறும் 0.3 சதவிகிதம் என்ற அளவிலேயே இருப்பதாகவும், ஆனால் சராசரியாக 1.5 சதவிகிதம் இருந்தால் மட்டுமே வேலையின்மை விகிதத்தை குறைக்கமுடியும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.