தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரான்ஸில் தீவிரவாத தாக்குதல்: பிணைக் கைதிகளாக மக்கள் தவிப்பு, இருவர் பலி .

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். இதையடுத்து மக்களை பிணைக் கைதியாகவும் பிடித்து வைத்துள்ளனர். இந்த தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்சின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டிரிப்ஸ் நகரிலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்த தீவிரவாதி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் பலர் காயமடைந்தனர். உடனடியாக காவல்துறையினர் விரைந்து வந்து அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

 

இதையடுத்து சூப்பர் மார்க்கெட்டிற்குள் இருந்த மக்களை பிணைக் கைதியாக அந்த தீவிரவாதி பிடித்து வைத்துள்ளாரெனவும், தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறன.

இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
Loading...