Designed by Iniyas LTD
பிரான்ஸ் அணியை வீழ்த்தியதில் மகிழ்ச்சி! ரொனால்டோ
போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ கருத்து தெரிவிக்கையில், ‘பிரான்ஸ் அணியை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் இதுவும் ஒன்றாகும். எனது நாட்டுக்காக கோப்பையை வென்று வரலாறு படைக்க வேண்டும் என்று நான் நீண்ட காலமாக சொல்லி வந்தேன்.
தற்போது அதனை செய்து காட்டி இருக்கிறேன். எல்லாம் எங்களுக்கு சாதகமாக அமைந்ததற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் காயம் அடைந்து விரைவில் வெளியேறினாலும், எங்கள் அணி வீரர்களுக்கு கோப்பையை வெல்லும் திறமையும், ஆற்றலும் உண்டு என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது’ என்றார்.
கோப்பையை வென்று அசத்திய போர்ச்சுகல் அணி தனி விமானம் மூலம் நேற்று தங்கள் நாட்டு தலைநகரான லிஸ்போன் சென்றடைந்தது. விமான நிலையத்தில் அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்துக்கு தேசிய கொடியுடன் திரண்டு வந்திருந்த ரசிகர்கள் வீரர்களை வாழ்த்தி கோஷம் எழுப்பினார்கள்.