Designed by Iniyas LTD
பிரான்ஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 2 பேர் கைது
பிரான்ஸ் நாட்டில் வரும் 23-ந் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், அங்கு தீவிரவாத தாக்குதல் சதி ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. அதில் ஈடுபட்டிருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தீவிரவாத செயல்களை செய்வதற்காக மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் என தகவல்கள் கூறுகின்றன.
அவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மார்செய்லீ என்ற இடத்தில் போலீஸ் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுகிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டுள்ள 2 வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது