தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரான்ஸ் பொலிசுக்கும், அகதிகளுக்கும் இடையே மோதல்

சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகள் உட்பட உள்நாட்டு போர், தீவிரவாதம் போன்ற காரணங்களால் ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளை நோக்கி படையெடுக்கின்றனர்.frin

மக்களுடன் மக்களாக தீவிரவாதிகளும் உள்நுழைவதால், அகதிகளை வரவேற்க ஐரோப்பிய நாடுகளும் தயக்கம் காட்டி வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு பிரான்சின் கலைஸ் முகாமிலிருந்து லொறிகள் மூலமாக பிரித்தானியாவுக்கு அகதிகள் செல்ல முயன்றுள்ளனர். சுமார் 200-300 அகதிகள் ஒன்றிணைந்து லொறிகளில் தொற்றிக் கொண்டு செல்ல முற்பட்டதால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இவர்களை அப்புறப்படுத்த பொலிசார் முயன்ற போது, பொலிசுக்கும், அகதிகளுக்கும் இடையே மோதல் உண்டானது. இதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்ற போதிலும், பொலிசாரை தாக்க முயன்ற வழக்கில் அகதி ஒருவரை கைது செய்துள்ளனர்.

Comments
Loading...