Designed by Iniyas LTD
பிரிட்டிஸ் எயார் வேய்ஸ் நிறுவனம் இலங்கைக்கான சேவைகளை நிறுத்தியுள்ளது
பிரிட்டிஸ் எயார் வேய்ஸ் நிறுவனம் இலங்கைக்கான சேவைகளை நிறுத்திக் கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் கொழும்புக்கான விமான சேவையை நிறுத்திக் கொள்ளவுள்ளதாக, பிரிட்டிஸ் எயார் வேய்ஸ் கூறியுள்ளது. யுத்தம் காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஸ் எயார் வெய்ஸ் நிறுவனம் மீள ஆரம்பித்திருந்தது.
எனினும் போதிய இலாபம் கிடைக்காத காரணத்தினால் விமானப் பயணங்களை நிறுத்திக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக விமான சேவை நிறுவன நிர்வாகம் அறிவித்துள்ளது.எதிர்வரும் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 28ம் திகதி வரையில் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பயணங்கள் தொடரும் எனத் தெரிவித்துள்ளது.