Designed by Iniyas LTD
பிரித்தானியாவில் உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் பெரும் எழுச்சியோடு இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு!
தமிழீழ தேசிய நாளான மாவீரர் நாள் இந்தவருடம் உலகமெங்கும் பெரும் எழுச்சியோடு நினைவுகொள்ளப்பட்டதென்பது எமது விடுதலைப் போராட்டத்தின் பயணத்தினை இன்னும் வீச்சாக்கியுள்ளது. தமிழீழம் மற்றும் தமிழகம்,ஐரோப்பா அமெரிக்கா ஆகிய நாடுகளில் பெரும் திரளான தமிழ் மக்கள் எங்கள் மாவீரச் செல்வங்களுக்கு தங்கள் கண்ணீரால் வணக்கம் செலுத்தினார்கள்.
அந்த வகையில் பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் மாவீரர் நினைவு இல்லத்தில் மாவீரர்சி நாள் வெகு சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பெரும் திரளான புலம்பெயர் உறவுகள் அலை அலையாக வந்து எம் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியதாக தமிழீழ மாவீரர் பணிமனையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் பிரதான சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு சிறப்புத் தளபதி ஜெயத்தன் அவர்கள் ஏற்றினார். தொடர்ந்து மாவீரகளுக்கான சுடர்களை மாவீரர்களின் உறவுகள் மற்றும் தாயக உறவுகள் ஏற்றினார்கள். தொடர்ந்து மாவீரர் நாள் நிகழ்வில் கலந்துகொண்ட பல முக்கிய பிரமுகர்கள் உரையாற்றினார்கள் எனவும் மாவீரர் பணிமனையினர் தெரிவித்துள்ளனர்.





