Designed by Iniyas LTD
பிரித்தானியாவில் கோர விபத்து!
பிரித்தானியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் எட்டு பேர் உயிரிழந்ததுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவின் Buckinghamshire பிரதேசத்தின் Newport Pagnell என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இரண்டு லொரி மற்றும் மினி பஸ் ஒன்றும் மோதியதினாலேயே இந்த விபத்த நிகழ்ந்துள்ளது.
பிரித்தானிய நேரப்படி இன்று அதிகாலை 3 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் இரு சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக Thames Valley பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாரதிகளில் ஒருவர் அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அவசர பிரிவுகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாகவும், குறித்த பகுதியில் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
உயிரிழந்த 8 பேரும் அந்த பஸ் வண்டியில் பயணித்தவர்கள் என நம்பப்படுகின்றது.
சிறுவர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.