Designed by Iniyas LTD
பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்! நான்கு பேர் பலி
லண்டனில் அமைந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் சம்பவத்தை “பயங்கரவாத தாக்குதலாகவே” கருதுவதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் படு காயமடைந்திருப்பதாகவும் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரி கத்திக் குத்திற்கு இலக்காகியுள்ளார்.
தாக்குதலாரி மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு, காயமுற்ற அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் கார் ஒன்று வேகமாக செலுத்தப்பட்டு அங்கிருந்த தடுப்புச் சுவரில் மோதச் செய்யப்பட்டதாகவும் அதற்கு முன் அந்த கார் நான்கு அல்லது ஐந்து பாதசாரிகள் மீது ஏற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டவுடன் நாடாளுமன்றத்துக்குள்ளிருந்த பிரித்தானிய பிரதமர் தெரெசா மே அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் அவசரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற வளாகத்திற்குள் இருந்தவர்கள் யாரும் வெளியேறவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதோடு, நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி யாரும் வரவேண்டாமென்றும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

