Designed by Iniyas LTD
பிரித்தானிய பிரபுக்கள் சபையில் இலங்கை தொடர்பான குறுகிய கால விவாதம்
பிரித்தானிய பிரபுக்கள் சபையில் மீண்டும் இலங்கை தொடர்பான குறுகிய கால விவாதம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 11ம் திகதி இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புக்கள் தொடர்பான விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்துக்குள் பிரித்தானிய பிரபுக்கள்சபையில் இலங்கை தொடர்பில் இடம்பெறும் இரண்டாவது விவாதமாகும்.
ஏற்கனவே கடந்த வாரம் இடம்பெற்ற விவாதத்தின் போது விடுதலைப் புலிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தடையை நீக்கியமை, இலங்கையின் ஜனாதிபதி தேர்தல், பொதுவேட்பாளர் மைத்திரிபாலவின் முதலாவது தொலைக்காட்சி நிகழ்ச்சி அரசாங்கத்தினால் குழப்பப்பட்டமை உட்பட்ட விடயங்கள் விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.