Designed by Iniyas LTD
பிரிவினை வாதம் பற்றி பேச அனுமதிக்க முடியாது – சரத் பொன்சேகா..
வடக்கில் பிரிவினை வாதம் பற்றி பேச அனுமதிக்க முடியாது என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதை குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் புலிகளை அழித்து . சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான பின்னணியை தோற்றுவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் இது போதாது வடக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் பிரிவினை வாதம் பற்றி பேசுகின்றார்கள் என்றும் தெற்கில் உள்ள சிங்கள மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
அதிகாரப்பகிர்வு வேண்டுமானால் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் என்றும், ஆனால் தமிழ் மக்கள் பொருளாதார அபிவிருத்தியில் ஆர்வமாக இருக்கின்றார்களே தவிற அரசியலில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அரசியல் வாதிகளின் தேவைப்பாடுகளை அல்ல. எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், நாட்டின் சகல இடங்களிலும் இராணுவத்தினர் இருக்க வேண்டும் எனவும், இராணுவத்தினர் வடக்கில் இருந்து அகற்றப்பட மாட்டார்கள் எனவும் சரத்பொன்சேகா இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.