தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கான மாற்றுத்திட்டத்திற்கு பிரித்தானிய நாடாளுமன்றம் ஆதரவு

பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கான மாற்றுத்திட்டத்திற்கு பிரித்தானிய  நாடாளுமன்றம் ஆதரவு அளித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தத்தில் திருத்தங்களைச் செய்து மாற்றுத் திட்டத்தை அந்நாட்டின்  பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார்.

பிரிட்டனில் தங்க விரும்பும் ஐரோப்பியர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும்  தெரசா மே அறிவித்திருந்தார்.

பிரெக்சிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் கடந்த மாதம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து பிரதமர் தெரசாமே  மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

எனினும்  அதில் தெரசாமே அவர்கள்  வெற்றி பெற்றதால் மாற்றுத்திட்டத்திற்கு தெரசா மே  ஆதரவு கோரினார் .

அவரின் இந்த கோரிக்கைக்கு 318 எம்பிக்கள் ஆதரவாகவும் 310 எம்பிக்கள் எதிராகவும் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...