தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிறந்தநாள் விழா: விஜயகாந்துக்கு தொண்டர்கள் வாழ்த்து

201608251114566985_DMDK-Leader-vijayakanth-birthday-celebration_SECVPFதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது 65-வது பிறந்தநாளை இன்று சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் கொண்டாடினார்.

இதையொட்டி வீட்டில் கட்சி கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன.

விஜயகாந்துக்கு மனைவி பிரேமலதா, மகன்கள் சண்முகபாண்டியன், விஜய பிரபாகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்கள்.

மைத்துனர் எல்.கே.சுதீஷ் மற்றும் குடும்பத்தினர் விஜயகாந்துக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டில் தொண்டர்கள் குவிந்தனர். வரிசையில் நின்று ஒவ்வொருவராக விஜயகாந்தினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொண்டர்கள் மத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டினார். விஜயகாந்த் வீட்டுக்கு முன்பு தொண்டர்கள், பொது மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.

பிறந்த நாளையொட்டி விஜயகாந்துக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரிலும், தொலைபேசியிலும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தே.மு.தி.க. பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, முன்னால் எம்.எல்.ஏ. நல்லதம்பி, மாவட்ட செயலாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Comments
Loading...